Pages

Saturday, September 4, 2010

பொன் மொழி பழமொழிகள்

ஒருவன் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு அவனுடைய மரணத்தின்போதுதான் தீர்மானமாகிறது.

இயற்கை என்னும் தாய் மார்பில் பால் குடிக்கும் தன் குழந்தையை ஒரு மார்பில் இருந்து இன்னொரு மார்பிற்கு மாற்றும் போது ஏற்படும் இடைவெளியே மரணம்.

வாழ்வைத் தள்ளினாலும் சாவைத் தள்ளக் கூடாது.

மனிதர்கள் இறந்த பின்னர்தான் அவர்களைப் பற்றி மதிப்பீடு செய்கிறோம்.

பிறப்போடு பிறந்தது மரணம்.

மரணம் என்பதும் வாழ்வு என்பதும் இரண்டு வேறு வேறான சங்கதிகள் அல்ல வாழ்க்கையை அனுபவிப்பதென்பது மரணத்தை அனுபவிப்பதுதான்.

செத்தவன் வாயில் மண் இருந்தவன் வாயில் சோறு.

கெட்ட செய்திகள் போல வேறு எதுவுமே வேகமாகப் பரவுவதில்லை.

காத்துக் கொண்டிருக்காதே நீ ஒருபோதும் செயற்படமாட்டாய்.

குனியாதே சுமப்பாய் நிமிர்ந்தால் உயர்வாய்.

நன்றி மறவாத வாழ்வு நம்மை அறியாமலே உயரும்.

வார்த்தைகள் அசிங்கமானால் வாழ்வும் அசிங்கமாகும்.

ஆழமான அறிவே அழகான வாழ்வை அமைக்கும்.

புத்தகம் இல்லாத வீடு சன்னல் இல்லாத இருட்டறை போன்றது.

துன்பத்தை மறந்தாலும் அது புகட்டிய பாடத்தை மறக்காதே.

ஓர்மம் ஒப்பற்ற சாதனைகளை உருவாக்கும்.

உருப்படியான வேலைக்கே உலகம் உன்னை அழைத்திருக்கிறது மறந்துவிடாதே.

அரிய சந்தர்ப்பங்கள் தேடி வரும்போது அதைப் பயன்படுத்தத் தவறாதே

உங்கள் நேரம் உங்களுக்குத் தெரியாமல் எடுக்கப்படுவதை உணருங்கள்.

ஆழமான அர்த்தங்களும் அதிகமான தத்துவங்களும் அடங்கியதே வாழ்க்கை.

வாழ்க்கைக்கு ஓர் உயர்ந்த லட்சியம் இருக்க வேண்டும்.உனது லட்சியம் எவ்வளவு உயர்வாக உள்ளதோ, அவ்வளவு உயர்வாக அமையும் உனது வாழ்வு.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒன்றைக் கற்றுக்கொள்வதற்க்கும் முன்னேறுவதற்கும் வாய்ப்பிருக்கும்.

பின்னோக்கிப் பார்க்காதே.எப்போதும் முன்னோக்கி நீ எதைச் செய்ய விரும்புகிறாயோ, அதையே பார். நீ முன்னேறுவது உறுதி.

பாறைகளைச் சந்திக்காவிடில் ஓடைகளுக்குச் சங்கீதம் இல்லை

வலைகளின் எண்ணிக்கை அதிகமாவதால் மீன்களின் எண்ணிக்கைக் குறைந்துபோவதில்லை.

புதைக்கப்படுவதுதான் கல்லறையென்றால் ஒவ்வொரு மனிதனின் இதயமும் கல்லறைதான்

தன் மீது விழும் மண்ணைச் சுமையென நினைப்பதில்லை விதை

காயங்களுக்கு மருந்து வேண்டாம், கனிவான பார்வை போதும்

எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள், ஏமாற்றத்தால் சோர்வடையமாட்டாய்

வீட்டுக்குள் நடப்பதை வீதிக்கு எடுத்துச்செல்லாதே, வீதியில் பாதித்தவற்றை வீட்டுக்குக் கொண்டுவா

குழந்தையை ரசிக்கக் கற்றுக்கொள். குணவானாவாய்

இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.
மற்றவர்களின் குறைகளைப் பற்றி மட்டுமே ஆராய்ந்து கொண்டிருக்காதே. அவர்களின் நல்ல குணங்கள் உனக்கு தெரியாமலே போய் விடும்.

உன் கண்களில் கருனையையும், உன் வார்த்தையில் அன்பையும் காட்டு, பகையாளியும் உன்வசமாவான்.

நான் என்ற அகந்தையை விடு. நான் எல்லாம் தெரிந்தவன் என்று மற்றவர்களை குறைவாக மதிப்பிடாதே. அந்த மமதை உன்னை அளித்து விடும்.

எல்லோரையும் பாராட்டும் மனப்பான்மையை வளர்த்துக் கொள். தன்மானத்தை என்றும் விடாதே

பொறுமைக்கு என்றும் அழிவில்லை. பொறாமை குணத்தை விட்டொழி.




1 comment: