Pages

Thursday, September 2, 2010

பழமொழி

1. பூ மலர்ந்து கெட்டது , வாய் விரிந்து கெட்டது .
Blossoms open and die, your mouth opens and destroys you.

2. எரிகிற விட்டிலே பிடுங்கிறது லாபம்.
Whatever you are able to secure from a burning house is a gain.

3.காடுப்பூனைகுச் சிவராத்ரி விரதமா ?
Will a wild cat observe the fast of Sivaratri ?

4.உழக்கு மிளகு கொடுப்பானேன் , ஒளிந்திருந்து மிளகு சாரு குடிப்பானேன் ?
Why should he give a measure of pepper and drink the pepperbroth in
secret ?

5.சாதுரியப்பூனை மீன் இருக்க, புளியங்காயத் திங்கிறதாம்.
The artful cat ate tamarind when there was fish.

6. வெறும் வாய் மெல்லுகிற அம்மையாருக்கு அவல் அகப்பட்டது போல .
It is like a bowl of Aval(Rice obtained from fried paddy by pestling it) given to a woman who has been chewing her empty mouth.

7. பந்தியிலே வேண்டாம் வேண்டாம் என்றாலும் , இலை போத்தல் இலை போத்தல்
என்கிறான்.
Though I repeatedly refuse to take him to place where food was served,
he is constatly saying that there is holes in the Ilai (leaf plate).

8. உழுகிற நாளில் ஊருக்குப் போய், அறுக்கிற நாளில் அரிவாள் கொண்டு வந்தது
போல.
During the ploughing season he goes about visiting places, but returns
on time with his sickle for the harvest season.

9. கஞ்சி கண்ட இடம் கைலாசம் , சோறு கண்ட இடம் சொர்க்கம் .
Any place which gives him rice-gruel is his Kailash, and whatever
place which gives him rice is his Heaven.

10. சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது .
The cat that has got fire burns will never go near the kitchen.

11. குமரிக்கு ஒரு பிள்ளை , கோடிக்கு ஒரு வெள்ளை .
One child for a young girl and one white for a clothesline.

12. வீட்டுக்கு செல்வம் மாடு , தொட்டச் செல்வம் முருங்கை.
The treasure of a house is a cow and treasure of a garden is Murungai
tree.

13. பெண்ணின் கோணல் , பொன்னிலே நிமிரும்
Unprettiness of a girl will be shielded by her gold ornaments.

14. தேரோட போச்சு திருநாளு , தாயோட போச்சு பிறந்த அகம்.
When the procession of Temple car ends the festival ends, the support
from home ends with death of the mother.

15. உயிரோடு இருக்கும்போது ஒரு கரண்டி நெய்க்கு வழி இல்லை, ஓமத்துக்கு ஒன்பது கரண்டி நெய் விட்டது போல .
While he was alive they couldn't not afford one spoonful of ghee, now
they spend nine spoons of ghee for the cermonial fire.

16. கைய பிடித்து கள்ளை வார்த்து , மயிரை பிடித்து பணம் வாங்குறதா ?
Is it right to offer toddy first in a friendly way and then hold the
hair and take away all the money?

17. ஆம்புடையான் செத்து அவதி படும் போது, அண்டை வீட்டுக்காரன் அக்குளிலே பாய்ச்சுகிறான் !
While the wife was sorrowing seeing her husband in deathbed, her
neighbour thrust his hand into her armpit arm-pit.

18. சீலை இல்லை என்று சித்தி வீட்டுக்கு போனாளாம் , அவள் இச்சம் பாயை
கட்டிகொண்டு எதிரே வந்தாளாம் .
She went to her aunt's house since she had no saree but her aunt came
out wearing a rug!

19. பள்ளத்திலே இருந்தா பொண்டாட்டி , மேட்டிலே இருந்தா அக்கா !
While they are in the valley he treats her as his wife, while on the
hill he treats her as his sister.

20. ஊரார் வீட்டு நெய்யே , என் பொண்சாதி கையே.
Though the ghee belonged to the village, it is my wife's hand that is
serving the ghee.

21. செல்லம் செரூக்குகிறதா ? வாசல் படி வழுக்கிறதா ?
Was it the unbound affection or the entrance to the house that made you slip?

22.கடுகு களவும் களவுதான் , கற்புரம் களவும் களவு தான்.
Theft is a theft ,be it stealing a mustard or acamphor.

23. இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா?
Won't the person who cut the leaves today , would cut the fruits tomorrow?

24. கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
The dancer watched the east, the labourer watched the west.

25. பாம்பாடிக்குப் பாம்பிலே சாவு , கள்ளனுக்கு களவிலே சாவு.
Death of snake charmer would be caused by his snake, death of a thief will be caused by his theft.


26. கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் .
It's enjoyment till the marriage and its misery from then.


27. துட்டு வந்து போட்டியிலே விழுந்ததோ , திட்டு வந்து பொடியிலே விழுந்ததோ?
Is it the money or the scoldings , that go into the savings box?


28. திருவாக்குக்கு எதிர்வாக்குக்கு உண்டா?
Are there any words which can go against God's words.

29. ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்.
Even a broken pot might contain sugar.


30. அறுப்புக்காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி .
During the harvest time a rat keeps five wives.

31. பங்குனி என்று பருக்கிறதுமில்லை, சித்திரை என்றும் சிறுக்கிறுதுமில்லை.
Neither does he expand in March nor does he get lean in April.

32. குறையச் சொல்லி , நிறைய அள.
Give more quantity with a lesser price

33. அஞ்சும் மூன்றும் உண்டானால் , அறியாப்பெண்ணும் சமைக்கும்.
If the five and the three are at hand, even an ignorant girl can cook.

34. அறைக்காசை ஆயிரம் பொன்னக்குகிறவளும் பெண்சாதி , ஆயிரம் பொன்னை அறைக்காசு
ஆக்கு கிறவளும் பெண்சாதி.
The one who is capable of converting half a coin into a thousand gold
coins is a wife, and the one who is capable of reducing a thousand
gold coins to half a coin is also a wife.


35. ஒரு நாளும் சிரிக்காதவன் திருநாளில் சிரித்தான் , திருநாளும் வேறு
நாளாச்சுது .
When one who had never smiled, smiled on a sacred day, even the sacred day became an ordinary day.


35. ஒரு நாளுமில்லாமல் திருநாளுக்குப் போனால் , திருநாளும் வேரு நாளாச்சுது.
When a man, who never attended a festival, attends one, even the
festival day becomes a common day.

No comments:

Post a Comment