வாழையின் பெருமையும், அவசியத்தையும், மருத்துவகுணங்களை அறிந்த நம் முன்னோர்கள் வாழைப்பழத்திற்கும் மும்மூர்த்திகளின் பெயர்களை சூட்டியுள்ளார்கள். பூவன்-பிரம்மனை குறிக்கும், மொந்தன் (முகுந்தன்) திருமாலைக் குறிக்கும். பேயன் சிவனைக்குறிக்கும்.
மலிவாய் கிடைத்திடும் பழம்!
மலச்சிக்கலை போக்கிடும் பழம்!
தாய்ப்பாலை சுரக்கவைத்திடும் பழம்!
தோலைக்காத்திடும் பழம்!
கண்ஒளி தந்திடும் பழம்!
குடல் நோய் போக்கிடும் பழம்!
உடல் சூட்டைத் தணித்திடும் பழம்!
ஏழைக்கென்றே இறைவன் படைத்த பழம்!
மாசுபடாத வாழைப்பழம்:
வாழைப்பழத்தை இயற்கையிலேயே தோலினால் கிருமிகள் தொற்றாதபடியும், மற்ற மாசுக்கள் படியாத படியும் அமைந்துள்ளது. இவ்வாழைப்பழத்தை உணவு உண்பதற்கு முன் சாப்பிடுவது நல்லது.
வயிரு நிறைய சாப்பிட்டுவிட்டு பழங்களைச் சாப்பிட்டால் விரும்பும்
பயன் கிடைக்காது. வயிரு நிறைய உணவு இருக்கும் போது , பழம் சாப்பிட்டால் மற்ற உணவுகளுடன் சேர்ந்து பலமணி நேரம் வாயிற்றில் தங்கநேரிடும் இதனால் உணவு புளிப்படைந்து தீமைபயக்கும். அதனால் உணவு உன்பதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக சாப்பிடவேண்டும்.
பூவன்:
உடலுக்கு நல்ல ஊட்டச்சத்தினைத் தரக்கூடியது. இது உடல் வளர்ச்சிக்கும், தசைகளின் ஆரோக்கியத்திற்கும் நல்ல பயனைத் தருகிறது.
இதனின் த்னி சிறப்பு என்னவென்றால் மலச்சிக்களை அகற்றுவதும், மூல நோய் வராமல் தடுப்பதும்,ஜீரணசக்தியை அளிப்பதும் ஆகும்.
நாம் உண்ணும் உணவை சத்துள்ளதாக்கி நல்ல தேற்றி மருந்தாகவும் பயன்படுகிறது. சத்து உணவு கிடைக்காத குழந்தைகளுக்கு தினம் ஒரு பூவன்
கொடுத்து வந்தால் அக்குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் உடல் வலிமையையும் பெருக்க முடியும்.
ரஸ்தாளி:
ருசிமிக்கது, இருதயவலிமைக்கு மிகவும் சத்துள்ள பழம் பித்தத்தைபோக்கும் பசியைக்கட்டுப்படுத்தும், இது வாத நோயாளிக்கு
உதாவது எனக்கூறப்படுகிறது. குழந்தைகளுக்குப் பேதியானால் ரஸ்தாளிப்
பழத்தை தண்ணீரில் கரைத்து கொடுத்தல் பேதி நின்று விடும்.
மொந்தன்பழம்:
காமாலை நோயைக்குணப்படுத்தும், உடல் உஷ்ணத்தை இது சமனப்படுத்தும் உடல் வளர்ச்சிக்கு ஊட்டத்தைக் கொடுத்தாலும் குறைவாகத்தான்
சாப்பிட வேண்டும். இது லேசான வயிறு மந்தத்தை தோற்றுவிக்கக்கூடும்.
நேந்திரன்:
இருதய நோயைப் போக்கி, இருத்யத்திற்கு வலிமைதரும். நேந்திரன் பழமும் தேனும் கலந்து சாப்பிட்டல் இரத்சோகை பித்தம், சயரோகம் தொண்டை அடைத்தல், இளம்பிள்ளைவாதம் நீங்கும். நேந்திர பழத்துடன்
மிளகைச்சேர்த்து சாப்பிட்டல் இருமல் குணம் அடையும்.
பச்சவாழை:
குளிர்ச்சி இயல்பினைப்பெற்றது உடல் உஷ்ணம் இருந்தால் சமன்ப்படுத்தும், காசநோய் மற்றும் ஆஸ்துமா உள்ளவர்கள் இந்தப்பழத்தை
தவிர்ப்பது நல்லது.
மலைப்பழம்:
இது இரத்தத்தை விருத்திசெய்யவல்லது. எளிதில் சீரணமாகும். குளிர்ச்சியானது, குடற்புண்ணை ஆற்றும், பித்தத்தை குறைக்கும்.
செவ்வாழை:
செவ்வாழை அதிக மருத்துவகுணங்களை உடையது. உடல் ஆரோக்கியத்தைக்கொடுப்பதோடு கண் பார்வை தெளிவாக இருக்க உதவும்.
நரம்புத்தளர்ச்சியை நல்ல முறையில் குணமாக்கும்.
செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டுவந்தால் நோய்கள் குணமாகும். நோய்க்கிருமிகளை எதிர்த்து அழிக்கும் ஆற்றல்
செவ்வாழைக்கு உண்டு.
செவ்வாழையில் விட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் கண்கள் தொட்ர்பான குறைபாட்டையும் இந்தப்பழம் அகற்றிவிடும். பல் மற்றும்
எலும்பு போன்ற உறுப்புகளை வலிமைப்படுத்தி ஆரோக்கியநிலையில் வைத்திருக்கும் ஆற்றல் இந்த பழத்திற்கு உண்டு.