பிளாஸ்டிக்கை நாம் புத்திசாலித்தனமாக பயன்படுத்தா விட்டால் நமது பூமியையே மயானமாக்கும் அளவிற்கு அசுரத்தனம் மிகுந்தது. இது சாதாரணா பிளாஸ்டிக் பைகள் முதல் விண்வெளிதுறை வரை பிளாஸ்டிக் தனது ஆதிக்கத்தை பரவலாக நிலை நாட்டி விட்டது. அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிப்போய் விட்ட இந்த பிளாஸ்டிக்கே இல்லாத ஒரு உலகைப் பற்றி நம்மால் நினைத்து பார்க்க முடியுமா?
plasticos என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து தான் பிளாஸ்டிக் பிறந்தது. பிளாஸ்டிக்கோஸ் என்றால் வடிவமாக்குதல் என்று பொருள் இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பான்மையான பிளாஸ்டிக்குகளும் செயற்க்கையாக உருவாக்கப்பட்ட பாலிமர்கள் தான். இயற்கை எரிவாயு பொட்ரோலியம் போன்றவையே பிளாஸ்டிக் தயாரிப்பிற்கான அடிப்படைப் பொருட்கள்.
ஃபிரடரிக் ஷோன் பின் என்னும் ஜெர்மானிய வேதியல் விஞ்ஞானி தமது ஆய்வகத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்த போது பீக்கரில் எடுத்து வைத்திருந்த கந்தக அமிலமும் நைட்ரிக் அமிலமும் கை தவறி தரையில் வீழ்ந்து சிதறியது. பக்கத்திலிருந்த ஒரு பருத்தித் துணியால் அதைத் துடைத்து சுத்தப்படுத்த முயன்ற போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அங்கே ஒரு புதிய பொருள் உருக் கொண்டு வந்தது. நைட்ரோ செல்லுலோஸ் (NITROCELLULOSE) பருதியின் செல்லு வோஸம் நைட்ரிக் அமிலமும் வேதிவினை புரிந்து உருவான எளிதில் தீப்பற்றக் கூடிய இந்த செயற்கை பாலிமரே பிளாஸ்டிக் எனும் புதிய யுகத்திற்கான கதவைத் திறந்து விட்டது.
பிளாஸ்டிக்கை பொதுவாக தெர்மோ பிளாஸ்டிக், தெர்மோ செட்டிங் என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இதை சூடாக்கும்போது மிருதுவாகி குளிர்விக்கும் போது மீண்டும் திட வடிவத்தை அடையும் பிளாஸ்டிக்கே தெர்மோ பிளாஸ்டிக். அதாவது சூடாக்கும் போது அதில் வடிவமாற்றம் மட்டுமே நிகழ்கிறது. இவற்றை பல்வேறு புதிய பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். செல்லுலோஸ் டை நைட்ரேட்டும் கற்பூரமும் கலந்து உருவாக்கப்படும் செல்லுலாய்டே, முதலில் குறிப்பிட்ட தெர்மோ பிளாஸ்டிக் பாலி எதிலீன் பாலி வினைல் குளோரைடு(பிவிசி) நைலான் போன்றவை தெர்மோ பிளாஸ்டிக்கிற்கான சான்றுகள். அதே வேளையில் சூடாக்கும் போது வேதியல் மாற்றம் அடைபவை தெர்மோ செட்டிங் பிளாஸ்டிக்குகள். அதனால் தான் அவற்றை நம்மால் மீண்டும் பயன்படுத்த இயலாமல் போகிறது. பேக்கலைட் பாலியெஸ்டர் போன்றவை இந்த வகையைச் சேர்ந்தவை.
உலகின் அற்புதங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட பிளாஸ்டிக் சுற்றுச்சூழல் இயற்கை சமநிலை போன்றவற்றின் சுவடுகளை மாற்றியமைத்து இப்போது பூமியை ஒரு தற்கொலை முனைக்கு கொண்டு வந்து விட்டது. பிளாஸ்டிக்குகள் மண்ணில் காற்றோட்டத்தையும் அதன் நீருற்று திறனையும் குறைக்கிறது. நுண்ணுயிர்களின் வளர்ச்சி முதல், செடி கொடிகளின் வளர்ச்சி வரை இதனால் பாதிக்கப்படுகின்றன. பல வித நோய்களுக்கு தூதனாக செயல்படும் கொசுக்களின் உற்பத்திக்கு பிளாஸ்டிக் பெருந்துணை புரிகிறது.
இந்தியாவின் பிளாஸ்டிக் பயன்பாடு வருடத்திற்கு 90 லட்சம் டன்னை எட்டி விட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.பிளாஸ்டிக்கை எரித்து விடலாம் என்றால் அதுவும் அபாயகரமானது பிளாஸ்டிக்கை எரிக்கும் போது வெளியாகும் டயாக்ஸின் போன்ற விஷ வாயுக்கள் புற்றுநோய்க் காரணிகள் என்று ஆய்வுகள் முலம் அதிகாரப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. காற்று மண்டலத்தில் பல வருடங்கள் நிலைத்திருந்து நாசம் விளைவிக்கும் திறன் பெற்ற விஷவாயுவே டயோக்ஸின் பிவிஸி போன்ற பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கும் போது டயோக்ஸின் மட்டுமல்லாது வினைல் குளோரைடு குளோரோ பென்ஸீன் போன்ற புற்றுநோய்க் காரணிகளும் வெளிவருகின்றன.
பிளாஸ்டிக் தயாரிப்பு தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளும் விஷமயமானவை தான் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கவர்ச்சியான நிறங்கள் தர பயன்படுத்தும் அஸோ டையில் அடங்கியிருக்கும் காரீயம் காட்மியம் போன்றவை நிலத்தடி நீரைக் கூட மாசுபடுத்தும் வீரியம் கொண்டவை. பிளாஸ்டிக் மென்மையை அதிகரிக்கப் பயன்படுத்தும் அஸோடையில்(AZODYE) அடங்கியிருக்கும் காரீயம் காட்மியம் போன்றவை நிலத்தடி நீரைக் கூட மாசுபடுத்தும் வீரியம் கொண்டவை.பிளாஸ்டிக் மென்மையை அதிகரிக்கப் பயன்படுத்தும் டை ஈதல் ஹெக்ஸைல் தாலேட் போன்ற வேதிப்பொருட்கள் ஆண்மைக் குறையை ஏற்படுத்தும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment