Pages

Tuesday, January 11, 2011

கவிதை

கண் அசைந்தால்
காதலா
காமமா
கோவமா
கனிவா என
கை பிசைந்து
காணவே
கரை புரண்டு ஓடிவிட்டது
காலம் எனக்கு

உரைப்பாய் சமைத்து
உனக்கு பரிமாறினால்
உரைப்பது இல்லை ஓரு
வார்த்தை
உப்பு ஓரு நாள்
உதவாமல்
விதைப்பு இல்லா
உணவாகினால்
வர்ணங்கள் நம்
வீட்டு மேசை எங்கும்
வீட்டில் சோற்றை சுமந்து
வெறிக்கும் என் பார்வையில்
விரிந்து

மகரந்தமாய்
மலர் சூடி
மணம் வீச
மடித்து தழுவிய
மாம்பிஞ்சு புடவையில்

மனசுக்கு அருகிலே நின்றாலும்
மலர்ச்சியாய் ஒன்றும்
மாறுவதில்லை உன் முகம்
மாறுதலாய் கொஞ்சம் என்னையும் கவனிப்பாய்
மறு நிமிடம் திறும்பிவிடும் உன்
மன கவனம்
மலையாய் குவிந்து இருக்கும்
மடல்களின் மீது என்னிடம்
மகிழ்ந்து என்ன
மொழிவது என்றோ
மடல்கள் கவசமாய் உன்னை
மறைக்க விரும்புகிறாய்

சுருக்கமாய் என் மனது
சோர்வை
சுமந்து வாசல் நோக்கி
செல்லும் கால்கள்

இத்தனை கவனமாய் என்னை
இயற்றிய
இறைவன் மேல் சின்னதாய்
இயலாமல் எழுந்து அமுங்கும் கோவம்
இருக்கட்டும் என்னை தான்
இப்படி ஒரு நிலையில்
இருத்தி விட்டாய்
இங்கே யரேனும்
இழந்து
இருக்கின்றனறோ உன் கவனம் எல்லாம் என்று
இறைச்சலாய் ஒரு கேள்வி

என் எண்ணங்கள் அறிய பெற்ற
எனக்கு உதித்த இளவல்களும்
எக்கமாய்

பல முறை பத்து
படி ஏறி சோர்ந்து இரண்டு
படி இறங்கி உன்னிடம்
படித்தது என்னவோ
பயன் இல்லா
பாசங்கள் தான்

உறவற்ற ஓரிடம்
உனக்கு புகலிடமாய்
உரையாமல்
உதிரத்தாலும் உள்ளார்ந்த அன்பை சுமந்த நாங்கள் எப்படி
உன் உறவுகளாய்
உடமைகளாய் ஆனோம்.....ஆக்கப்பட்டோம்

விளைந்திடாத
விதையாய் நான்
விட்டு செல்லும் கேள்வி இது தானோ!

Sunday, October 10, 2010

இராஜகனி

மங்களம் தரும் கனி, நம் விட்டில் பெண்கள் தினம் தினம் உண்வாகவும், மருந்தாகவும், பயன்படுத்தும் கனி நம் நலவாழ்விற்கு பெரிதும் பயன்படும் எலுமிச்சம்பழம் தான் ’இராஜகனி’.

சித்த மருத்துவம்:
1.வெப்பத்தைக்குறைக்கும்.
2.உடலைத்தூய்மைப்படுத்தும்.
3.மூளையின் வளர்ச்சியையும், இயக்கத்தையும் மேம்படுத்தும்.
4.வாதத்தை விலக்கும்.
5.இருமல் மற்றும் தொண்டைநோய்களை குணப்படுத்தும்.
6.மூலத்தைக்கரைக்கும்.
7.விஷங்களை முறிக்கும்.
8.உடல் பருமனை குறைக்கும்.
9.வயிற்று வலி ம்ற்றும் உப்பசத்தை குணப்படுத்தும்.

பொதுவாக உடல் நலம் தொடர்பாக, இது ஆற்றும் உதவிக்கு ஈடாக வேறு எந்தக்கனியையும் கூற முடியாது.அதனால் தான் இதற்கு இராஜகனி என்று பெயர் வந்தது!!

டாக்டர் பிளன் என்ற ஜெர்மானிய மருத்துவர் எலுமிச்சைபற்றிய ஆராய்ச்சி செய்தார். 1875 ஆம் ஆண்டு தன் ஆராய்ச்சி முடிவை அறிவித்தார். கெட்ட இரத்தத்தைத் தூய்மைபடுத்தும் மருந்துகளில் எலுமிச்சைப்பழத்தைவிட சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை
என்று கண்டறிந்தார்.

இரத்தக்குழாய்களைத் தூய்மைப்படுத்தும்:
தொற்று நோய் கிருமிகளை உடலில் வளர விடாதபடி தடுக்கும் வைட்டமின் ‘சி’ சத்து எலுமிச்சைச் சாற்றில் உள்ளது. இச்சாறு இரத்தக்குழாய்களைத் தூய்மைப்படுத்தி, அவைகளைப் நன்றாக இயங்குவதற்கு எலுமிச்சை உதவுகிறது.

உலகப்போரில் எலுமிச்சை:
இராண்டாம் உலக யுத்தத்தின் போது, காயம் பட்ட வீரர்களுக்கு காயம்பட்ட இடத்தில், இரத்தம் வடிவதை நிறுத்த எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தினார்களாம்.

மூச்சு திணரலை குறைக்க:
உயரமான மலையின் மேல் சென்றால் பிராணவாய்வு குறைவாக இருக்கும். இதனால் மூச்சு திணரல் ஏற்பட வாய்ப்பு அதிகம். அந்தமாதிரி சமயங்களில்,எலுமிசைச்சாறு அருந்தினால் மூச்சு திணரல் குறையும்.

இளமை நீடிக்க:
நமது உடலானது கோடிக்கணக்கான உயிர் அணுக்களால் ஆனது. தினமும் உயிர் அணுக்கள் சிதையும். சிதையும் நுண்ணுயிர்களுக்கு ஈடாக உயிர் அணுக்கள் உருவாகும். அதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். சிதைந்த உயிரணுக்களை உருவாக்கும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு.உயிரணுக்கள் சிதைவதற்கு ஈடாக உற்பத்தியானால் இளமை நீடிக்கும் குறைந்தால்...............?

கதிர் இயக்க ஆற்றலைக் குறைக்கிறது:
எலுமிச்சைப் பழத்தில் “பயோஃபிளேவின்” என்ற சத்து உள்ளது. இது கதிர் இயக்க ஆற்றலைக் குறைக்கிறது என்பது விஞ்ஞானிகள் அய்வு முலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அணுகுண்டு,ஹைட்ரஜன் குண்டுகளில் கதிர் இயக்க ஆற்றலினால் ம்னிதர்களுக்கு பெரியப்
பாதிப்பினை எற்ப்படுத்துகிறது. இந்த கதிர் இயக்க ஆற்றலினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் ஆற்றல் எலுமிச்சை பழத்திற்கு உண்டு.

பற்கள் பிரகாசிக்க:
எலுமிச்சம்பழத்தோலை வெய்யிலில் காய வைத்து பொடியாக்கி உப்பு உடன் கலந்து தினமும் பல் தேய்த்து வந்தால் பற்களில் கறை நீங்கி, பற்கள் தூய்மையாக இருப்பதோடு, வாய் துர் நாற்றம் நீங்கும்.

கல்லீரல் ஆரோக்கியத்திற்கு:
எலுமிச்சைச்சாறு ஒரு ஸ்பூன், தக்காளிச்சாறு மூன்று ஸ்பூன், தேன் ஒரு ஸ்பூன் ஆகியவற்றை இளம் சூடான தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.